கடவுள்!
June 12th, 2007 by luckylookஎன்றோ ஏதோ ஒரு வலைப்பூவில் வாசித்த சில கேள்விகள் மிக நியாயமாக எழுப்பப்பட்டிருந்தது. அந்த வலைப்பூ எழுத்தாளர் எழுப்பியிருந்த சில கேள்விகள் :
1. கடவுள் என்பவரது இருப்பை எப்படி உணருவீர்கள்?
2. கடவுளைப் பற்றிச் சொல்ல ஏன் எப்பொழுதும் தூதுவர்கள் வர வேண்டும் (அல்லது அவராகவேஅவதாரமாக வர வேண்டும்)
3. கடவுளின் அவதாரம் /தூதர் இப்போது இருந்தால் கண்டுபிடிக்க முடியுமா ? அப்படின்னு ஒருவர் சொன்னால் ஒத்துக் கொள்வோமா ? லூசுப் பயன்னு சொல்ல மாட்டீங்க ,கடவுளின் அவதாரம் /தூதுவர் அற்புதங்கள் செய்ய வேண்டுமா…4. உலகம் தட்டையானது / சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற கடவுள் ( அப்படித் தானே கடவுள் அருளிய வேதம் சொல்லுகிறது ) பூமியை மையமாக வைத்துத் தான் சிந்தித்திருப்பாரா ? அப்ப நம்ம கடவுள் சந்திரனுக்கும் புதனுக்கும் கடவுள் இல்லையா அவர் பூமிக்கான குறு நில மன்னர் தானா ?
5. ஆன்மிகத்திற்கு மதம் என்ற அமைப்புத் தேவையா ?
6. சுவர்க்கம் /மறுமை /நரகம் போன்றவைகள் நம்பத் தகுந்ததா ?
நீங்கள் ஆத்திகராக இருந்தால் விவாதியுங்கள். நாத்திகராக இருந்தால் விவாதத்தை வேடிக்கை பாருங்கள்

1. கடவுள் என்பவரது இருப்பை எப்படி உணருவீர்கள்?
எப்போதோ படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கடவுள் தன் இருப்பைக் காட்ட ஒரு மலைப்பகுதிக்கு வரச்சொன்னாராம் ஊர் மக்களிடம். அதிகாலைப் பொழுதில் அனைவரும் குழுமியிருக்க கடவுள் தான் வருவதாக சொன்ன நேரமும் நெருங்கி விட்டது. அப்போது மெல்லிய தென்றலுடன் சுகந்த மணமும் சேர்ந்து குயில்கள் மற்றும் பல பட்சிகளின் இனிய குரல் ஒளித்தது. ஒரு இன்பமயமான சூழல் ஏற்பட்டது. சிறிது நேரம் கழிந்தது கடவுள் மறுப்பாளர்கள் சொன்னார்கள்.. பார்த்தீர்களா கடவுள் என்பது இல்லையென்று எக்காளமிட்டுக் கொண்டு சென்றார்கள்.. கடவுளை உணர்ந்தவர்கள் மட்டும் அந்த அனுபவத்தில் திளைத்து நின்றார்கள். ( நினைவில் இருந்து எழுதியது. )
2. கடவுளைப் பற்றிச் சொல்ல ஏன் எப்பொழுதும் தூதுவர்கள் வர வேண்டும் (அல்லது அவராகவேஅவதாரமாக வர வேண்டும்)
கடவுளைப் புரிந்துக் கொண்டால் இந்த தூதுவ ஏமாற்றுக் காரர்களை புரிந்துக் கொள்ளலாம். கடவுள் ஒன்றும் நாம் அடைய முடியாத இடத்தில் இருப்பவரைப் போலவும் தூதுவர்கள் ஒரு மீடியேட்டர்கள் போலவும் ஒரு மாயை உருவாக்கி அதில் குளிர் காய்ந்தவர்கள்.. காய்பவர்கள் மட்டுமே உண்டு. நற்குணம் கொண்ட நல் மனிதர்களை தெய்வமாக்கும் தண்மை இந்தியாவில் மட்டுமே காணமுடியும். வெளிநாடுகளில் ( இப்போது நம் நாட்டிலும் )அவர்கள் தூதுவர்கள் என்று தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டு ஏமாற்ற ஆரம்பித்து விடுவார்கள்
3. கடவுளின் அவதாரம் /தூதர் இப்போது இருந்தால் கண்டுபிடிக்க முடியுமா ? அப்படின்னு ஒருவர் சொன்னால் ஒத்துக் கொள்வோமா ? லூசுப் பயன்னு சொல்ல மாட்டீங்க ,கடவுளின் அவதாரம் /தூதுவர் அற்புதங்கள் செய்ய வேண்டுமா…
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். ஜென் தத்துவத்துல அருமையா சொல்லுவாங்க. ஜென்னை புரிந்து கொண்டேன் அல்லது இல்லை என்ற இரண்டுமே பொய்யானது. அற்புதங்கள் செய்ய கடவுள் என்ன மந்திரவாதியா ? தூதுவர்களின் அற்புதங்களை சற்றே தோண்டிப் பார்த்தால்
) சந்தி சிரித்துவிடும். இது எல்லா கடவுள் தூதர்களுக்குமே பொருந்தும்.
4. உலகம் தட்டையானது / சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற கடவுள் ( அப்படித் தானே கடவுள் அருளிய வேதம் சொல்லுகிறது ) பூமியை மையமாக வைத்துத் தான் சிந்தித்திருப்பாரா ? அப்ப நம்ம கடவுள் சந்திரனுக்கும் புதனுக்கும் கடவுள் இல்லையா அவர் பூமிக்கான குறு நில மன்னர் தானா ?
அண்டங்களை ஆள்பவன் ஆண்டவன். தட்டை பொட்டை கொட்டை என்று அவரவர் சொல்லிக் கொள்வது ஏமாற்று வித்தையே.. கடவுள் சொன்னதாகச் சொல்லி பிறரை ஏமாற்றும் உத்தி.
5. ஆன்மிகத்திற்கு மதம் என்ற அமைப்புத் தேவையா ?
ஒத்த சிந்தனையாளர்களை ஒருங்கினைக்க உருவான மதத்திற்கு தற்போது மதம் பிடித்திருப்பதால் இனியது தேவையில்லை. தன்னை உணர்ந்து தன்னிலை அறிந்து தன்னுள் கடவுளை காண்பவ மதங்களையோ மனிதர்களையோ தூற்றிக் கொண்டிருக்க மாட்டான். அப்படி தூற்றுபவன் உண்மையில் இறைவழியில் இருந்து விலகி வெகுதூரம் சென்றவனாகவே இருப்பான்.
6. சுவர்க்கம் /மறுமை /நரகம் போன்றவைகள் நம்பத் தகுந்ததா ?
கண்ணதாசன் பாடல் :
கலைமகள் கைப் பொருளே…
.. சொர்கமும் நரகமும் நம் வசமே
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே…
( ரொம்ப நாளைக்கப்புறம் வலையில எழுத வச்ச பெருமை உங்களுக்கு .. நன்றி )
Agnosticism
இந்த முகவரிக்கு போய் பாருங்க லக்கி… உங்க கேள்விகளுக்கும் இந்த பக்கத்துல இருக்கிற மேட்டருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிற மாதிரி இருக்கு….
எனக்கும் இது போல பல கேள்விகள் இருந்தன இருக்கின்றன, நான் இதுவரை கண்ட பதில்களை கூறுகிறேன். இது என் சொந்த கருத்துக்களே,
இன்னும் தெளிவடைந்த பிறகு என் பதில்கள் வேறாக இருக்கலாம்
இன்றுள்ள நிலையில் இதுவே என் தெரிதல்
1. கடவுள் என்பவரது இருப்பை எப்படி உணருவீர்கள்?
ஆபத்தில் உதவும் மனிதனின் உள்ளத்திலும், தாயின் பாசத்திலும் ஏன் ஒரு குழந்தையின் சிரிப்பிலும்கூட கடவுளை உணரலாம். துன்பத்தில்
இருக்கும் ஒருவருக்கு உதவும் ஒருவனை தூண்டுவது கடவுளே. கண்ணதாசன் பாடல்தான் நினைவிற்கு வருகிறது ‘அனுபவமே கடவுள்’ .
2. கடவுளைப் பற்றிச் சொல்ல ஏன் எப்பொழுதும் தூதுவர்கள் வர வேண்டும் (அல்லது அவராகவேஅவதாரமாக வர வேண்டும்)
நாம் பிறக்கும் பொழுதே எல்லாம் தெரிந்துவிடுவதில்லை நமக்கு வழிகாட்ட ஒரு ஆசான் தேவைபடுகிறார், அந்த ஆசானே தூதுவர்கள்.
எல்லோருக்கும் இறைவனை அடையும் வழி தெரிந்தால் தூதுவர்கள் தேவையில்லை.
குந்தி கண்ணனிடம் ஒரு வரம் கேட்டார் “எனக்கு எப்போதும் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்கவேண்டும்” என்று.
கண்ணன் திடுக்கிட்டார் ஏன் இப்படி ஒரு வரம் வேண்டுமென்று , அதர்க்கு குந்தி சொன்னார் “அப்பொழுதுதான் உன்னை எப்பொழுதும் நினைத்துகொண்டே இருப்பேன்” என்று.
3. கடவுளின் அவதாரம் /தூதர் இப்போது இருந்தால் கண்டுபிடிக்க முடியுமா ? அப்படின்னு ஒருவர் சொன்னால் ஒத்துக் கொள்வோமா ? லூசுப்
பயன்னு சொல்ல மாட்டீங்க ,கடவுளின் அவதாரம் /தூதுவர் அற்புதங்கள் செய்ய வேண்டுமா…4. உலகம் தட்டையானது / சூரியன் பூமியை
சுற்றுகிறது என்ற கடவுள் ( அப்படித் தானே கடவுள் அருளிய வேதம் சொல்லுகிறது ) பூமியை மையமாக வைத்துத் தான் சிந்தித்திருப்பாரா ? அப்ப
நம்ம கடவுள் சந்திரனுக்கும் புதனுக்கும் கடவுள் இல்லையா அவர் பூமிக்கான குறு நில மன்னர் தானா ?
கலியுகத்தில் மனிதன்முன் கடவுள் தோன்ற மாட்டார் என்று கூறுகிறார்கள் அப்படியே தோன்றினாலும் அறிவித்துகொள்வார் என்று
தோன்றவில்லை. என் சொந்த கருத்து - இன்றய சூழ்நிலையில் தன்னை அப்படி யாரும் அறிவித்தால் நான் நம்ப மாட்டேன். உதாரணமாக நான்
சாய்பாபாவை நம்புவதில்லை ஆனால் மந்திராலய ராகவேந்திரரை நம்புகிறேன், அவரின் இறுதி உரையின் ஒரு பகுதி கீழே
Always keep away from people who merely perform miracles without following the shastras and yet call themselves God or guru. I have
performed miracles, and so have great persons like ShrImadAchArya. These are based on yoga siddhi and the shastras. There is no fraud or
trickery at all. These miracles were performed only to show the greatness of God and the wonderful powers that one can attain with His grace.
Right knowledge (jnana) is greater than any miracle. Without this no real miracle can take place. Any miracle performed without this right
knowledge is only witchcraft. No good will come to those who perform such miracles and also those who believe in them.
//உலகம் தட்டையானது / சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற கடவுள் ( அப்படித் தானே கடவுள் அருளிய வேதம் சொல்லுகிறது )//
இது கடவுள்/வேதம் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. ஜோதிட கலை வேதங்களிலிருந்து வந்தது. ஜோதிடம் எதிர்காலத்தை கனிக்கும் என்று
நீங்கள் நம்ப வேண்டாம், ஆனால் அந்த காலத்திலேயே எந்த ஒரு கருவியும் இல்லாமல் துல்லியமாக கோள்களின் சுழற்சியை
கண்டுபிடித்திருக்கிறார்கள் இது எப்படி சாத்தியமாயிற்று?
5. ஆன்மிகத்திற்கு மதம் என்ற அமைப்புத் தேவையா ?
மதம் என்பது கடவுளை அடையும் ஒரு பாதை. எந்த மதத்தை எடுத்தாலும் அவை போகும் பாதை வேறாக இருக்கலாம். ஆனால்
அடையும் இடம் ஒன்றே. நாத்திகமும் ஒரு மதம் என்று நான் சொல்வேன், ஆன்மிகத்திற்கு மதம் தேவையில்லை ஆனால் அது மதத்தை விட
கடினமான பாதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தியானத்தை எடுத்திக்கொள்வோம், கடவுளை நினைத்து தியானம் செய்வது சுலபமாக இருக்கலாம், அதே நமிதாவை நினைத்து செய்தால்
கற்பனை குதிரை எங்கோ கொண்டு சென்றுவிடும் தியானத்தை
6. சுவர்க்கம் /மறுமை /நரகம் போன்றவைகள் நம்பத் தகுந்ததா ?
இவைகளை நம்புவதால் மனிதன் தவறு செய்வது குறைவதால் நம்புவதே நல்லது. இல்லை என்று யாரும் நிரூபிக்கும் வரை நம்புவதே நல்லது.
மேலே கூறியவை யாவும் என் சொந்த கருத்துக்கள், எந்த மதமோ, ஜாதியோ இதை கூறவில்லை. என் தேடலின் இன்றய நிலையை எனக்கே
உணரவைத்ததற்கு நன்றி. இன்னும் தேட வேண்டியது நிறைய உள்ளது
ஏதாவது தப்பா இருந்தா ஆட்டோ அனுப்பாதீங்க மன்னிச்சு விட்டுடுங்க
//1. கடவுள் என்பவரது இருப்பை எப்படி உணருவீர்கள்?//
இந்த உலகத்தில், பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருட்களுக்கும் உயிர்களுக்கும் அடிப்படையாக cosmic intelligence ஒன்று உள்ளது. இது ஒரு உணர்வு நிலை (pure consciousness எனலாம்). இதை சிவம் எனலாம் (சிவன் அல்ல), பரம்பொருள் எனலாம், ஆதிபகவன் என்றும் கூறலாம். சிவமும், energy ஆகிய சக்தியும் புணர்வதால் நிகழ்வதே பிரபஞ்ச விளையாட்டு. நாம் அனைவரும், அனைத்துமே ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்களே. பரம்பொருளிலிருந்து வந்தவர்களே நாம். முடிவில் பரம்பொருளிலேயே கலக்கிறோம்.
தத்துவவாதிகளும் விஞ்ஞானிகளும் தான் பரம்பொருள்போன்ற அருவ பொருட்களை சிந்திக்க விரும்புகிறார்கள். கொஞ்சம் கவித்துவமும் கலையுணர்வும் நிரம்பிய மனிதர்கள் சிவத்துக்கு ஒரு வடிவம் கொடுத்து சிவனாக்கினார்கள். சிவனையும் சக்தியையும் சேர்த்து அர்த்தநாரி ஆக்கினார்கள். இந்த உருவங்களை உருவாக்கியது மனிதர்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பெரியார் பாத்திரத்தில் சத்யராஜ் நடித்தாலும் நாம் திரையில் பெரியாரையே பார்க்கிறோமோ, அதுபோல் சிவனின் உருவத்தை பார்க்கும்போது சிவமாகிய பரம்பொருளையே பார்க்கின்றோம். சிவனில் மட்டுமல்ல, எல்லா மனிதர்களிலும், உயிர்களிலும், பொருட்களிலும், தத்துவங்களிலும், தன்னிலும்கூட பரம்பொருளை பார்ப்பவனே ஞானி. இதைப் புரிந்து கொண்டால் கடவுளின் இருப்பை இங்கேயே இப்போதே உங்களால் உணர முடியும்.
//2. கடவுளைப் பற்றிச் சொல்ல ஏன் எப்பொழுதும் தூதுவர்கள் வர வேண்டும் (அல்லது அவராகவேஅவதாரமாக வர வேண்டும்)//
மிருகங்களில் உடல் ரீதியில் நிகழ்ந்து வந்த பரிணாம வளர்ச்சி மனிதனில் மன ரீதியிலும், உணர்வு ரீதியிலும் நிகழத் தொடங்கியது. மனிதன் மன ரீதியில் தனக்கு மேலான குணநலன்களை வளர்த்துக் கொண்டு தனது பரிணாமத்தை வளர்த்து வருகிறான். குணநலன்களை பற்றி சிந்திக்கும் போது அந்த குணநலன்களை தாங்கிய உருவம் நம் மனதில் வருவது இயற்கையே. திடகாத்திரமான உடலைப் பற்றி நினைக்கும் போது நம் மனதில் அர்ணால்ட் ஷ்வார்ஷெநெகரோ வேறு ஒரு பாடி பில்டரோ நம் மனதில் தோன்றுவது இயற்கை. அதுபோல் தனக்கு மேலான குணநலன்களை தியானம் செய்ய மனிதனுக்கு அப்பப்போது ஒரு template தேவைப்படுகிறது. உருவமில்லாமல் வெறும் குணத்தை மட்டும் நினைத்துப் பார்க்கும் abstract thinking அனைவருக்கும் சாத்தியமில்லை.
வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தபோது இந்தியர்களுக்கு அவர்களை உறுதியுடன் எதிர்க்கும் குணநலன்கள் நிரம்பிய template தேவைப்பட்டது. காந்தியையும் சுபாஷ்சந்திர போஸையும், மற்றோரையும் மக்கள் ஆதர்ஸமாக நினைத்து பின்பற்றினர். சாதிக் கொடுமைகளால் வாடிய சமூகத்துக்கு அதை தைரியமாக எதிர்க்கும் குணம் தேவைப்பட்டது. அதன் உருவமாக விளங்கிய பெரியார், நாரயணகுரு போன்றோரை பின்பற்றினர். இதுபோல் பல்வேறு காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான மிகவுயர்ந்த குணநலன்களுடன் தோன்றிய இயேசு, புத்தர், கிருஷ்ணர் போன்றோரை மக்கள் பின்பற்றி, வழிபட்டு, அவர்களை அவதாரங்கள் என்றும், தேவதூதர்கள் என்றும் போற்றுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது நாம் எல்லாருமே கடவுளின் அவதாரங்கள் என்று கூற முடியும்.
//3. கடவுளின் அவதாரம் /தூதர் இப்போது இருந்தால் கண்டுபிடிக்க முடியுமா ? //
உங்களுக்கு எவரையாவது ஆதர்ஸ மனிதராக, idealஆக பின்பற்றத் தோன்றுகிறதா? எவருடைய கொள்கைகளையாவது பின்பற்றும்போது உயர்வதாகவும், சுயமுன்னேற்றம் அடைவதாகவும் உணர்கிறீர்களா, அவரே கடவுளால் உங்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட தூதர். இந்த தூதர் ‘அவர்’ ஆக இருக்கலாம், ‘அது’ ஆக இருக்கலாம், ஒரு கற்பனைக் கதாப்பாதிரமாகக் கூட இருக்கலாம்.
//லூசுப் பயன்னு சொல்ல மாட்டீங்க ,கடவுளின் அவதாரம் /தூதுவர் அற்புதங்கள் செய்ய வேண்டுமா…//
நீங்கள் அற்புதம் என்று எதைக் கூறுகிறீர்கள்? பிரபஞ்ச விளையாட்டே அற்புதம் தானே. மனிதனின் அற்ப கண்டுபிடிப்புகளை அற்புதம் என்று வியக்கும் நாம், சூரியனைச் சுற்றி கோள்கள் துல்லியமாக உலா வருவதையும், இரவு வானத்தில் சந்திரனின் அழகையும் அற்புதம் என்று அவ்வளவாக போற்றாததே ஒரு அற்புதம் தானே!
மனிதன் தன்னால் விளக்க இயலாத நிகழ்வுகளை அற்புதம் என்கிறான். நூறு வருடங்களுக்கு முன்பு இது போல் ஒரு பெட்டி மூலம் மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்வார்கள் என்று கூறியிருந்தால் பைத்தியம் என்று பட்டம் கட்டியிருப்பார்கள். அது போல், டெலிபதி போன்ற விஷயங்களும் எதிர்காலத்தில் வெகுஜனங்களிடையே சாத்தியமாகும் என்றே நான் கருதுகிறேன். சாதாரண மக்கள் அற்புதம் என்று நினைக்கும் செயல்களை சர்வசாதாரணமாக நிகழ்த்தும் மனிதர்கள் இன்றும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்.
தான் செய்யும் செயல்கள் அற்புதம் என்றும், ஏதோ இவை தனக்கே உரித்தான ஆற்றல்கள் என்றும் காட்டிக் கொள்பவர்கள் தேவ தூதர்கள் கிடையாது. தான் செய்யும் அசாதாராண செயல்களை மக்களின் நன்மைக்காக செய்பவர்களும், எவராலும் செய்ய முடியும் என்றும் கூறுபவர்களே அவதாரங்கள், தேவ தூதர்கள்.
//4. உலகம் தட்டையானது / சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற கடவுள் ( அப்படித் தானே கடவுள் அருளிய வேதம் சொல்லுகிறது ) பூமியை மையமாக வைத்துத் தான் சிந்தித்திருப்பாரா ?//
உலகம் தட்டையானதுன்னு எந்த வேதம் சொல்லுது? கோயில்களில் நவக்கிரக அமைப்புகளில் சூரியன் நடுவிலும், அதைச் சுற்றி புதன், செவ்வாய் முதலான கோள்களும் இருப்பதைக் காண முடியும். நான் வேதங்கள் படித்ததில்லை, ஆனால் வேதங்களில் astronomy பற்றி ஆழமாகவும் துல்லியமாகவும் எழுதியிருக்கிறார்கள் என்று வேதம் பற்றிய ஏதோ ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் படித்துள்ளேன். வேதம் தெரிந்தவர்கள் இதைப் பற்றி விளக்கலாம்.
// அப்ப நம்ம கடவுள் சந்திரனுக்கும் புதனுக்கும் கடவுள் இல்லையா அவர் பூமிக்கான குறு நில மன்னர் தானா ?//
பூமிக்கும், சந்திரனுக்கும், புதனுக்கும் மட்டுமல்ல, பிரபஞ்ச முழுமைக்கும் அடிப்படையான பரம்பொருள் என்ற ஒரு உணர்வுநிலை உண்டு. நீங்கள் அதை எந்த பெயர் வேண்டுமானாலும் சொல்லி அழைக்கலாம். அதை பல்வேறு உருவங்களில் வழிபடுவது பயத்தினால் அல்ல, தாய் தன் குழந்தைக்கு பல்வேறு அலங்காரம் செய்து ரசிப்பது போல் அன்பினால் செய்வது. இதுவே பக்தி. பயத்தை மூலமாக கொண்டு செய்யப்படும் வழிபாடு பக்தி ஆகாது. இத்தகைய வழிபாடுகளை ‘பக்தி’ என்று பெயரிடும் பத்திரிகைகளில் வருபவை ஆன்மீகம் ஆகாது. வெறும் மூடநம்பிக்கை.
//5. ஆன்மிகத்திற்கு மதம் என்ற அமைப்புத் தேவையா ?//
சுருங்கக்கூறின், ஆன்மீகத்திற்கு மதங்கள் தேவையில்லை. ஆனலால் ஆன்மீக இலட்சியத்தை அடைய பல வழிகள் உள்ளது. நான் மேற்கூறிய பக்தி வழியை பின்பற்றலாம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் இதைத்தான் பின்பற்றினார்கள். சித்தர்கள் போல யோகம் மூலமாக அடையலாம். அப்துல் கலாம், கமலஹாசன் போல, தன் தொழிலையே தெய்வமாக கருதி கர்ம யோகம் புரியலாம். அல்லது ஞான யோகமாகிய பகுத்தறிவின் மூலமும் அடையலாம். ஆன்மீகம் என்பது சமூக விஷயமோ, பிறப்பு சார்ந்த விஷயமோ அல்ல, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
//6. சுவர்க்கம் /மறுமை /நரகம் போன்றவைகள் நம்பத் தகுந்ததா ?//
மறுபிறவி பற்றிய ஆராய்ச்சிகள் அறிவியல்ரீதியாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மறுபிறவி போன்றவற்றை ஆதரித்து பல முடிவுகள் வந்துள்ளன. தனிப்பட்ட முறையில் மறுபிறவியை நான் நம்புகிறேன்.
அனால் இவையெல்லாம் வெறும் நம்பிக்கையே. ஒரு விஷயத்தில் நம்பிக்கை கொள்வது வேறு, அதை அனுபவித்து உண்மை என உணர்வது வேறு. மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்றவை உள்ளதா என்று எவ்வளவுதான் விவாதித்தாலும், இறந்த பிறகு அனுபவித்து உணர்ந்த பிறகு தான் உண்மை என்றோ, உண்மை இல்லை என்றோ வலியுறுத்திக் கூற முடியும். இறந்த பிறகு இதை அனுபவிக்க முதலில் ‘நான்’ இருப்பேனா என்பதே கேள்விக்குறி தான்.
அதுவரை, நாம் வாழும் இந்த வாழ்க்கையிலேயே நம் கண்ணோட்டத்தின் மூலம் சொர்க்கத்தையும் நரகத்தையும் உருவாக்கிக் கொள்ளலாமே. பிரபஞ்ச விளையாட்டை ஆனந்தமாக, ஒரு spirit of adventureஉடன் விளையாடினால் இந்த வாழ்க்கையே சுவர்க்கம் தான். வாழ்க்கையை போராட்டமாக நினைத்து பயத்திலும் புலம்பலிலும் காலத்தை கழித்தால் அதைவிட நரகம் வேறென்ன இருக்க முடியும்.
இந்த விஷயங்களை (இதைவிட) சற்று விரிவாக இங்கே ஒரு பதிவாக போட்டுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அள்ளித் தெளியுங்கள்!
ஜீவாவின் கருத்துகளோடு நான் முழுவதும் ஒத்துப் போகிறேன். அந்தப் பதில்களையே என்னுடைய பதில்களாகவும் எடுத்துக் கொள்ளவும்.
மதம் மனிதனால் உருவாக்கப்படுவது. இறை அதற்கும் அப்பாற்பட்டது. மனிதன் உருவாக்குவதால்..ஒரு மதத்தில் உள்ள தவறை நிரூபித்து மற்ற மதங்கள் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்கின்றன. இதை எல்லா மதங்களிலும் காணலாம்.
அடுத்து அச்சமூட்டுவது. தேவையேயில்லை. அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே என்கிறார் வள்ளலார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? இப்பிடிப் பலர் சொல்லியதுதான். இருந்தாலும் மக்களுக்கு மிரட்டலும் அச்சுறுத்தலும் மிகவும் பிடித்திருக்கிறது. என்ன செய்வது!
[…] கடவுள்? தமிழ்மணம் விவாதக் களத்தில் கடவுள் பற்றிய சில கேள்விகளை பார்க்க நேர்ந்தது. கடவுள் பற்றி என் மரமண்டைக்கு புரிந்தவற்றை, என் நிலைப்பாடுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இவையெல்லாம் என் அரைகுறை அறிவின், அனுபவத்தின் வெளிப்பாடே. ஆன்மீகப் பாதையில் நான் இன்னும் வெகுதூரம் போக வேண்டியுள்ளது. இன்னும ஐந்து வருடங்கள் கழித்து இந்த பதிவைப் பார்க்கும் போது என் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று நினைக்கவே சுவாரஸ்யமாக உள்ளது. சரி, சொந்தக்கதை போதும். விஷயத்துக்கு போகலாம். […]
லக்கி,
முதலில் ஒரு உருப்படியான தலைப்பு கொடுத்ததற்க்கு மிக்க நன்றி.
நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் அருமை. ஆத்திகத்தை நக்கலடிக்காமல் விஷயங்களை அறியும்/விவாதிக்கும் படி அமைந்திருந்தன கேள்விகள்.
நான் ஒரு ஆத்திகன். எந்த பாகுபாடுமின்றி எந்த மனிதருக்கும் அல்லது செய்யாமல், தன்னாலன உதவி செய்வதால் கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதை உறுதியாய் நம்புகிறவன்
மறுபிறப்பில் நம்பிக்கையிருந்தாலும், நாம் செய்யும் செயல்களுக்கான(நன்றோ/தீதோ) பலன் இம்மையிலேயே கிடைத்து விடும் என்பதை முழுமையாக நம்புவதோடு என் குறைந்த (எனக்கு சின்ன வயசுதான்) அனுபவத்திலேயே கண்டுணர்ந்துள்ளேன்…
மற்றபடி மதத்தை ஆண்டவனை நினைக்கவைக்கும் அல்லது தேடவைக்கும் கருவியாகவே நான் உணர்கிறேன்.
உங்கள் கேள்வி வரிசைப்படி பதிலளிக்கும் அளவுக்கு இன்னும் நிறைய அறியவில்லை… ஏதோ எனக்கு தெரிந்தது,,,
அப்போ நான் வேடிக்கை பாக்குறேனுங்க…!!
avvala thaana vivaatham ?
life ,living is more important than all ur q,s .u must be lucky to have such a life……… we do have real problems totake our time and thinking
1. கடவுள் என்பவரது இருப்பை எப்படி உணருவீர்கள்?
உள்ளுணர்வின் நம்பிக்கையின் மூலம்.
2. கடவுளைப் பற்றிச் சொல்ல ஏன் எப்பொழுதும் தூதுவர்கள் வர வேண்டும் (அல்லது அவராகவேஅவதாரமாக வர வேண்டும்)
கடவுளே மனிதனாக அவதாரமெடுத்து மனித நியதிகளுக்குட்பட்டு வாழ்ந்து காட்டுவதினால், அவர் வழியை பின்பற்றும், நம் வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்களின் தாக்கங்களில் இருந்து தேறுவதற்குரிய மன வலிமையையும், ஒழுக்க நெறியில் வாழ்வதினால் மன அமைதி நிறைந்த வாழ்வையும் ஆன்மீக வாழ்வில் பெற்றுக்கொள்ள முடியும்.
3. கடவுளின் அவதாரம் /தூதர் இப்போது இருந்தால் கண்டுபிடிக்க முடியுமா ?
அவராக உண்ர்த்தினால்ன்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாது.
அப்படின்னு ஒருவர் சொன்னால் ஒத்துக் கொள்வோமா ? லூசுப் பயன்னு சொல்ல மாட்டீங்க.
தெரியவில்லை.
கடவுளின் அவதாரம் /தூதுவர் அற்புதங்கள் செய்ய வேண்டுமா?
குழந்தைகள்ளுக்கு டிவி காட்டி உண்வூடடுவது போல மாயையில் மூழ்கியுள்ள வளர்ந்த குழந்தைகளுக்கு அற்புதங்கள் காட்டியே தர்மத்தை ஊட்ட முடியும்.
4. உலகம் தட்டையானது / சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற கடவுள் ( அப்படித் தானே கடவுள் அருளிய வேதம் சொல்லுகிறது ) பூமியை மையமாக வைத்துத் தான் சிந்தித்திருப்பாரா ? அப்ப நம்ம கடவுள் சந்திரனுக்கும் புதனுக்கும் கடவுள் இல்லையா அவர் பூமிக்கான குறு நில மன்னர் தானா ?
தெரியாது.
5. ஆன்மிகத்திற்கு மதம் என்ற அமைப்புத் தேவையா ?
அவசியம். மதம் என்பது திமிர், ஆணவம். ஆதலால் மார்க்கம் (வழி) என்பது சரியாகும். எங்கு செல்வதானாலும் மார்க்கமானது அவசியமல்லவா!?
6. சுவர்க்கம் /மறுமை /நரகம் போன்றவைகள் நம்பத் தகுந்ததா ?
நம்பத் தகுந்ததே.
பொதுக்கடவுளை அறியும் முகமாக…
வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை’ என்றக் கொள்கையை ஏற்று அதன் படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல். இந்தக் கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டாலும் இந்தக் கொள்கை சரியானதுதான் என்று கருதுபவர்களும் கோடிக்கணக்கில் உள்ளனர்.
‘வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை’ என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் ‘லா இலாஹ இல்லா அல்லாஹ்’ என்று வரும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் ‘முஸ்லிம்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். முஸ்லிம் என்ற அரபு வார்த்தையை தமிழ்படுத்தினால் ‘கட்டுப்பட்டவர்’ என்று பொருள் வரும்.
இந்தக் கொள்கையாளர்கள் தங்கள் வணக்கங்களிலும், தங்கள் இறை நினைவுகளிலும், அந்தக் கொள்கையைப் பற்றிப் பேசும் போதும் அந்தக் கொள்கையின் அரபு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையில் ‘அல்லாஹ்’ என்ற பதம் வருவதால் அல்லாஹ் என்ற அந்தக் குறியீடு தனிக் கடவுளை குறிக்கும் ஒரு சொல் என்றும், முஸ்லிம்கள் தனிக் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் பிறர் விளங்கிக் கொள்கின்றனர்.
பல்வேறு மொழிகள் வழக்கிலுள்ள ஒரு நாட்டில் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு மொழியின் வார்த்தை ஒரு சாரார் பயன்படுத்தப்படும் போது அது வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தவே செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.
கிறிஸ்த்தவர்கள் வணங்கும் இயேசுவைப் பொருத்தவரை மொழிக்கு ஏற்றார்போல அந்த வார்த்தை மாற்றப்பட்டு புழக்கத்திற்கு வந்து விட்டது. ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்றும், அரபுவில் ஈஸா என்றும், தமிழில் இயேசு என்றும் இடத்திற்கு தகுந்தார்போல அவரது பெயர் மாற்றப்பட்டு விட்டதால் கிறிஸ்த்தவர்கள் இயேசுவென்று தமிழில் குறிப்பிடும் போது பிறர் அதை பளிச்சென்று புரிந்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை அவ்வாறு எல்லா சந்தர்பங்களிலும் அல்லாஹ் என்பதை மொழியாக்கம் செய்வதில்லை. (இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன) அல்லாஹ் என்றே குறிப்பிடுவதால் அல்லாஹ் என்பது ஒரு இணத்தின், ஒரு கொள்கையின் கடவுளை குறிக்கும் சொல் என்ற நிலையைப் பெற்று விட்டது.
இது வருந்தத்தக்க ஒன்றுதான், ஏனெனில் ஒரு மொழியில் பலவீனம் அல்லது மொழி இடைவெளிகளின் காரணத்தால் மிகப் பெரிய ஒரு பொதுக் கொள்கை தவறாக புரியப்படுவது வருந்தத்தக்கதுதான். இந்த தவறான புரிதல் அக்கறையுள்ள முஸ்லிம்களின் மீது கூடுதலான விளக்கும் சுமையை? ஏற்படுத்தியுள்ளது.
‘மிகப் பெரியக் கொள்கை’ அலட்சியப்படுத்தாமல் பரிசீலியுங்கள்.
‘அல்லாஹ்’ என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் ‘இலாஹ்’ என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது வேர் சொல்லாகும். இதற்கு ‘வணங்கப்படும் கடவுள்’ என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும்.
இந்த வரலாற்றை விளங்கிய யாரும் அல்லாஹ் என்பது இஸ்லாமிய கடவுளுக்குரிய ஆடையாளமல்ல என்பதை புரிந்துக் கொள்வர். ஏனெனில் இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.
பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது. ‘’பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா.. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர். (அல் குர்ஆன் 38:5)'’
இதுதான் உண்மையே தவிர பிறர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இஸ்லாம் புதிதாக அல்லாஹ் என்று ஒரு இறைவனை உருவாக்கிக் கொடுக்கவில்லை.
புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணம் கூறலாம். ஒருவேளை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் அரபு தேசத்தில் இல்லாமல் தமிழகத்தில் - தமிழ் மொழியில் வெளிப்பட்டிருந்தால் இங்கு நிலவி வந்த பல இறைக் கொள்கையை சீர் திருத்தி ஒரே இறைவன் என்ற அந்த மாபெரும் சக்தியை புரிய வைத்து அதன் பக்கம் மக்களை மீட்டெடுத்திருப்பார். அப்போது அவரது கொள்கை அரபுவில் மொழி பெயர்க்கப்பட்டால் தமிழில் முஹம்மத் அவர்கள் யாரை இறைவன் என்று குறிப்பிட்டார்களோ அது அரபுவில் அல்லாஹ் என்று மொழி பெயர்க்கப்படும். இதிலிருந்து அல்லாஹ் என்பது தனிக் கடவுளை குறிக்கும் சொல் அல்ல மாறாக பொதுக் கடவுளை குறிக்கும் சொல் என்பதை விளங்கலாம்.
தமிழில் பிரம்மன், விஷ்னு, முருகன் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும், இறைவன், கடவுள் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் விளங்கலாம். முந்தைய சொற்கள் தனிப்பட்டதையும் பிந்தைய சொற்களான இறைவன், கடவுள் என்பது பொது சக்தியையும் குறிப்பதாக எப்படி விளங்கிக் கொள்கின்றோமோ அதைப் போன்று தான் அல்லாஹ் என்பதும் எல்லோருக்கும் பொதுவான அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு போது இறைவனைக் குறிக்கும் ஒரு அரபு சொல்லாகும். அதனால் தான் பொதுக்கடவுளை ஏற்றுக் கொண்ட அரபு மொழி பேசக் கூடிய யூதர்கள், கிறிஸ்த்தவர்கள் கூட இறைவனை அல்லாஹ் என்றே குறிப்பிடுகிறார்கள்.
இஸ்லாம் எந்த ஒரு தனிக் கடவுள் கொள்கையையும் வகுக்கவில்லை மாறாக அது எடுத்தக் காட்டுவது பொதுக் கடவுள் கொள்கைதான் என்பதை சந்தேகமற விளங்க வேண்டும். பின்னர் சற்று அது கூறும் அந்தக் கொள்கையின் உள்ளே நுழையுங்கள்.
பகுத்தறிவே உலக புரட்சியின், வளர்ச்சியின் அடையாளம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. படிப்பும், சிந்தனையும், அனுபவமும் பகுத்தறிவை தூய்மைப்படுத்தி மனிதனை விசாலமாக்குகின்றது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தனது பகுத்தறிவை முழு வீச்சில் பயன்படுத்தும் மனிதன் தனது கடவுள் கொள்கைக்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் நம்பிக்கை என்ற பெயரில் பகுத்தறிவிலிருந்து விலகி நிற்பது விந்தையாக இருக்கின்றது.
சக்தியும் - வடிவமும்
பொதுவாக சக்தி அல்லது ஆற்றல் போன்றவற்றை வடிவப்படுத்தி மனிதன் அனுபவிப்பதில்லை. காற்று என்பது ஒரு ஆற்றல். அதை அனுபவிக்க காற்றுக்கு உருவம் வேண்டும் என்று எந்த மனிதனும் முடிவு செய்வதில்லை. ஒளி என்பது ஒரு சக்தி. ஒளிக்கு உருவம் வடிவம் கொடுத்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும் அனுபவிக்க முடியும் என்று எந்த அறிவும் நம்பிக்கையும் கூறுவதில்லை. வெப்பம் என்பது கூட ஒரு சக்தி. அதை உருவப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்று எந்த மனிதனும் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்ற சக்தி அனுபவிக்க மனிதன் விரும்பியவாறெல்லாம் உருவப்படுத்திக் கொள்கிறான். பிற இறைக் கொள்கையில் உள்ள பலவீனங்களில் ஒன்று கடவுளை உருவப்படுத்துவது. (இறைவன் உருவமற்ற வெறும் சூனியம் அல்ல. இறைவன் அவனுக்கே உரிய உருவ அமைப்போடு இருக்கிறான். அவனது உருவத்தை யாரும் இதுவரை கண்டதில்லை என்பதால் இந்தப் பரம்பொருளை உருவப்படுத்தக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது)
மனித கற்பனை, கடவுளை கொச்சைப்படுத்தலாமா..?
ஆன்றோர்கள் முதல் சான்றோர்கள் வரை எவருமே கடவுளை கண்களால் கண்டதில்லை என்பதால் தான் கடவுளாக கருதப்படும் வடிவங்கள் பெருத்த அவலங்களைப் பெற்றுள்ளன. கடவுளாக கருதப்படும் சிலைகளை பற்றி சிந்திக்கும் எந்த அறிவும் இது கடவுளை கொச்சைப்படுத்தும் போக்கு என்பதை விளங்கும்.
மனிதன் அவனுக்குத் தேவையானவற்றை மிக்க அழகுடன் வடிவமைக்கவே விரும்புகிறான். வீடு கட்ட விரும்பும் எந்த மனிதனும் கற்களை அடுக்கி கட்டி விட்டால் போதும் வீடாகி விடும் என்று முடிவு செய்வதில்லை. பொறியியளாளர்களின் ஆலோசனைப்படி வீட்டை அழகுற அமைக்கிறான். ஒரு ஓவியன் தனது ஓவியத்தை அசிங்கமாகவும் அவலட்ஷனமாகவும் வரைய விரும்புவதில்லை. புகைப்படக்காரர்கள் பார்த்தவுடன் முகம் சுலிக்கும் விதத்தில் அகோரமான புகைப்படங்கள் எடுப்பதில்லை. அவனது தேவைகளுக்காக அழகுணர்ச்சியை நாடும் மனிதன் கடவுளை கற்பனை செய்யும் போது மட்டும் எவ்வளவு கேவலமாக அதை வடிவமைத்துக் கொள்கிறான் என்பதை பார்க்கும் போது சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கரங்கள், மிருகங்களுக்குள்ள கோறப்பற்கள், யானைத்தலையும் பெருத்த தொப்பையும் கொண்ட உருவம். கருத்த, தடித்த நிறத்தில் பயங்கர உருவங்கள் என்று எத்துனை வித அகோரங்கள்!.
தனது குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கைகளுடன் குழந்தை பிறந்தால் கடவுளின் வடிவம் என்று அதை ஆபரேஷன் செய்யாமல் விட்டு விடுவார்களா..? கோரப் பற்களுடன் குழந்தைப் பிறந்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவார்களா..? இறைவனாக கருதப்படும் உருவங்களுக்கு ஏன் இந்த அவலங்கள்!
மேல் தட்டு மக்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒரு சாரார் வழிபடும் சிலைகளிடம் இத்தகைய அகோரங்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். தாழ்ந்த மக்களாக அவர்கள் கருதுபவர்களின் சிலைகளின் வடிவங்கள் கூட தாழ்ந்தவைகளாகவே இருக்க வேண்டும் என்ற ஜாதிய வெறிப்பாடே இவற்றிற்கு காரணம். இறைவன்(அல்லாஹ்)வாகிய அவனுக்கு இந்த அவலட்சனங்கள் இல்லை.
தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலையா..?
கல்லை கடவுளாக உருவப்படுத்திக் கொள்பவர்கள் அதை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதைப் பார்க்கிறோம். சாதாரண நடைமுறைக்கு கூட சாத்தியமில்லாத தத்துவத்தை மகாப் பெரிய பொதுக் கடவுள் கொள்கைக்கு பொருத்திப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அறிவாளிகளால் இதை எப்படி சரிகாணமுடியும் என்பதும் விளங்கவில்லை.
இந்தத் தத்துவத்தை சரிகாண்பவர்களின் வீட்டை ஒருவன் பார்த்து ‘இது உன் வீடென்றால் உன் வீடு, என் வீடென்றால் என் வீடு’ என்று கூறினால் மிக அழகான தத்துவம் அதனால் நீ விரும்பினால் இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடு’ என்று சொல்வார்களா..? சிலைகள் என்றைக்கும் சிலைகளாகத்தான் இருக்கும் அவை ஒரு போதும் தன் நிலையிலிருந்து உயர்வுப் பெறாது. வேண்டுமானால் நாளடைவில் அது தனது புதிய பொலிவை இழக்கலாம் அதைத்தவிர வேறெந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஊனமான பல சிலைகள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடப்பதைக் கூட பார்க்க முடியும். வித விதமாக பல சிலைகளை வடிவமைத்து தூக்கி ஆடிபாடி கடலில் கரைத்து விட்டு கடவுளை கண்ணியப்படுத்தி விட்டதாக மகிழ்கிறார்கள். உண்மையான இறைவனை இப்படியெல்லாம் செய்ய முடியுமா…? அல்லாஹ் என்ற அந்த இறைக் கொள்கை இவற்றிர்க்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.
சிந்தனையின் அடுத்தக்கட்டத்திற்கு நகருங்கள்.
ஏன் பல இறைவர்கள் வேண்டும்?எதற்காக, எந்த அடிப்படையில் இந்த மக்கள் பலக் கடவுள்களை நாடுகிறார்கள் அதற்கு என்ன அவசியம் என்பதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.
உயர்ந்த மனிதன்! தாழ்ந்தக் கடவுள்!!
திறமைமிக்க எந்த ஒரு மனிதனும் தன் திறமை தனித்துவத்துடன் வெளிப்படுவதையே விரும்புவான். தனது திறமையையும், உழைப்பையும், உலகம் மிகச் சரியாக கண்டுணர வேண்டுமானால் தாம் தனித்துவத்துடன் வெளிப்படவேண்டும் என்றே ஆசைப்படுவான். அப்படி வெளிப்பட்டவர்கள் தான் உலகில் மிளிர்கிறார்கள்.மிகச் சிறந்த, திறமைவாய்ந்த ஒரு கட்டிடப் பொறியாளர் தன்னுடைய திறமையால் ஒரு கட்டிடம் உயர்வதையே விரும்புவார். கூட்டு வைத்துக் கொண்டு தனது திட்டத்தை உருவாக்க மாட்டார். புகழ் மிக்க ஓவியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் யாராவது கூட்டாக ஓவியம் வரைந்து அந்தப் புகழை அடைந்தார்களா..? இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கூறலாம். பலவீனங்கள் அடங்கிய மனிதனே ஒற்றையில், ஒற்றைப்பாட்டில் இத்துனை உயர்வுப் பெறும் போது பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் மட்டும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டு இருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனைக் கற்பனை செய்பவர்கள் மனிதனின் ஆற்றலை விட கடவுளின் ஆற்றல் குறைந்தது என்று எண்ணுகிறார்களா..?
சீர்மை சிதையும் என்பது உறுதி.
முழு உலகையும் நீங்கள் உங்கள் சிந்தனை திரையில் கொண்டு வந்து விரியுங்கள். எந்த நாட்டிலாவது சம அதிகாரம் பெற்ற இரண்டு ஜனாதிபதிகள், இரு பிரதமர்கள் இருக்கிறார்களா…! அரசுத் துறைகள் எதுவொன்றிலும் சம அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்டு பணியாற்றுகிறார்களா…? ஒன்றுக்கு மேற்பட்ட இறைவர்கள் இருந்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள். இந்தக் கேள்விகளையும் தங்களுக்குத் தாங்களே சற்றுக் கேட்டுப் பார்க்கட்டும். ஒரு நாட்டிற்கு இரு பிரதமர்கள், இரு ஜனாதிபதிகள் இருந்தால் என்னத் தவறு?பள்ளிக் கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு இரு தலைமை ஆசிரியர்கள் இருந்தால் என்னத் தவறு? ஒரு வீட்டுக்கு இரு குடும்பத்தலைவர்கள் இருந்தால் என்னத்தவறு? இங்கெல்லாம் இருமை இருந்தால் என்னத் தவறு ஏற்படுமோ அதை விட பயங்கரம் இருக் கடவுள்கள் இருந்தால் ஏற்படும். இதை இறை வேதமாகிய குர்ஆன் இப்படிக் கூறுகிறது.*வானங்கள், பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டுக் கடவுள்கள் இருந்திருந்தால் அவை சீர்கெட்டு சின்னாபின்னமாகி இருக்கும்*. இது மறுக்க முடியாத உண்மை. எதுவொன்றும் ஒரே சீராக இயங்கவேண்டுமானால் அது ஒரு அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டும். நாடும் வீடும் சிறக்க ஒருமையே சரியானத் தீர்வு எனும் போது மொத்த உலகிற்கும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டக் கடவுளைக் கற்பனைச் செய்கிறீர்கள்?
பலவீனங்களே கூட்டாச்சியைப் பற்றி சிந்திக்கும்.
ஒரு பெரியக் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை என்றால் தங்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்து அந்தக் காரியத்தை சாதிப்பார்கள். இன்றைக்கு நடக்கும் கூட்டாச்சிகளை இதற்கு உதாரணம் கூறலாம். ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை தங்களுக்கு இருந்தாலும் அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்பதால் பிறரை நாடி கூட்டணி வைத்துக் கொண்டு நாடியதை சாதிக்கிறார்கள். (இந்தக் கூட்டணிகளில் பிரச்சனை உருவாகி முட்டி மோதிக் கொள்வது தனி விஷயம்)இப்போது சிந்தியுங்கள். இறைவர்களும் கூட்டாச்சி நடத்த வேண்டுமென்றால் இறைவர்களிடமும் மனித பலவீனங்கள் இருக்கின்றனவா..? இப்படி சிந்திப்பது கடவுளை பலவீனப்படுத்துவதாகாதா…? பலவீனத்திற்குட்பட்டவ(ர்)ன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? பல கடவுள் சித்தாந்தக்காரர்கள் நிதானமாக இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையான அந்தப் பரமசக்தி (அல்லாஹ்)க்கு எத்தகைய கூட்டு இறைவர்களும் தேவையில்லை. ஏனெனில் அவன் அனைத்து பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவன்.
பல கடவுள்கள் - பல மனிதர்கள்.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் கலந்து ஒரு மனிதன் உருவாகின்றான். அந்த உருவாக்கம், கருவரையின் குடியிருப்பு, பிறக்கும் முறைகள், பால்யப் பருவம் என்று உலகில் பிறக்கும் கோடானக் கோடி குழந்தைகளும் ஒரே விதத்தில் பிறக்கும் போது பின்னர் ஜாதியம் என்ற கொடிய நோய் அந்தக் குழந்தையோடு வந்து ஒட்டிக் கொள்கின்றது. மிக சொர்ப்பமானவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள், அதிகமானவர்கள் தாழ்ந்தவர்களாகின்றார்கள். மனிதத்துவம் சிதைந்து ஏற்றத்தாழ்வு உருவாகி நிலைப் பெற்று விட்டது. இதற்கு என்னக் காரணம்? பலக் கடவுள் கொள்கையே இந்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி பலக் கடவுள் கொள்கையை கைக் கழுவுவதேயாகும்.
விண்ணுலகம், மண்ணுலகம் என்று அனைத்துலகத்திற்கும் ஒரே இறைவன் என்ற நிலை வரும் போதுதான் அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சம அந்ததஸ்த்துள்ளவர்களாவார்கள். அதை மிக வலுவாக உலகில் நிலை நிறுத்திக் காட்டியது இஸ்லாம் ஒன்றுதான்.
மனித சகோதரர்களே.. கூண்டுகளிலும், முட்களிலும் சிறைப்பட்டு கிடக்கும் உங்கள் சிந்தனைச் சிறகுகளை அவற்றிலிருந்து விடுவித்து சற்று அகலமாக விரித்து பறக்க முயலுங்கள். அகன்ற வானவீதி அனைத்தையும் ஆளும் அந்த மகா இறைச் சக்தி உங்களுக்குப் புலப்படும். கடுகளவுக் கூட பலவீனமில்லாத அந்த மகா இறைச் சக்தியே உண்மையான இறைசக்தி.
அந்த இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவனல்ல. அவனே அனைத்துலகுக்கும் சொந்தமானவன். அந்த மகா சக்தியை அரபுமொழியில் ‘அல்லாஹ்’ என்று குறிப்பிடுகிறோம். இறைவன் என்று குறிப்பிடுங்கள், கடவுள் என்று குறிப்பிடுங்கள் அதில் எந்தத் தடையும் இல்லை. மனிதக் குலம் விடுதலைப் பெற வேண்டுமானால் அந்த ஓரிறைக் கொள்கைக் குறித்து சிந்திப்பது ஒன்றே சரியான வழியாகும்.
Comment by ஜி என் //
கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லாமல் வேறு எதையோ பேசி இருக்கிறீர்கள்.
கேள்விகளுக்கு உண்மையான பதிலைக் கூறுங்கள்